/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.12 லட்சம் நகையை திருடி 'கவரிங்' வைத்த பெண் ஊழியர்
/
ரூ.12 லட்சம் நகையை திருடி 'கவரிங்' வைத்த பெண் ஊழியர்
ரூ.12 லட்சம் நகையை திருடி 'கவரிங்' வைத்த பெண் ஊழியர்
ரூ.12 லட்சம் நகையை திருடி 'கவரிங்' வைத்த பெண் ஊழியர்
ADDED : நவ 12, 2024 12:28 AM
பாண்டிபஜார், தி.நகர், டாக்டர் நாயர் சாலையில் பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, நகை விற்பனை அதிகம் இருக்கும் என்பதால், புதிதாக சில ஊழியர்களை பணிக்கு சேர்த்துள்ளனர்.
அதன்படி, கடந்த மாதம் 22ம் தேதி ரேவதி என்ற பெண் வேலைக்கு சேர்ந்தார். அவர், கடந்த 3ம் தேதி முதல் திடீரென வேலைக்கு வராமல் இருந்தார்.
இதனால் சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர் சுரேஷ் ஜெயின், கடையில் அப்பெண்ணிற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள நகைகளை தணிக்கை செய்தார்.
அப்போது, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு பதில், கவரிங் நகைகள் வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து, கடையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பெண் ஊழியர் ரேவதி நகைகளை திருடி விட்டு, கவரிங் நகைகளை வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
இது குறித்து விசாரித்த பாண்டிபஜார் போலீசார், அப்பெண்ணை தேடி வருகின்றனர்.