தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/நண்பர்களுக்குள் மோதல் இருவருக்கு கத்திக்குத்து

நண்பர்களுக்குள் மோதல் இருவருக்கு கத்திக்குத்து

நண்பர்களுக்குள் மோதல் இருவருக்கு கத்திக்குத்து


UPDATED : அக் 06, 2026 12:46 AM

ADDED : அக் 06, 2026 12:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:46 AM ADDED : அக் 06, 2026 12:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோடம்பாக்கம்: கோடம்பாக்கத்தில் மது போதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இருவரை கத்தியால் வெட்டிய 10 பேரை, போலீசார் கைது செய்தனர்.

கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் எட்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ், 25. இவரது நண்பர் சுபேதார் கார்டனைச் சேர்ந்த அருண், 21. இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற அமீர் பாஷா, 19, உள்ளிட்டோருக்கும் பழக்கம் இருந்துள்ளது.

அருணுக்கும், ராகுலின் நெருங்கிய நண்பர் ஒருவருக்கும், மூன்று மாதங்களுக்கு முன் தகராறு நடந்து, முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நண்பர்கள் ஒன்றாக மது அருந்திய பின், சுபேதார் கார்டன் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்தனர். அப்போது, அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.

ஆத்திரமடைந்த ராகுல், மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கியதில் யுவராஜுக்கு தலையிலும், அருணின் இடது முழங்கையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு யுவராஜின் தலையில் 16 தையல்களும், அருணின் இடது முழங்கையில் எட்டு தையல்களும் போடப்பட்டன.

கோடம்பாக்கம் போலீசார் விசாரித்து, ராகுல், 19, இம்மானுவேல், 20, உட்பட 10 பேரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us