தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/அவசர ஊர்தி தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

அவசர ஊர்தி தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

அவசர ஊர்தி தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு


UPDATED : அக் 06, 2026 01:40 AM

ADDED : அக் 06, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 01:40 AM ADDED : அக் 06, 2026 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மாவட்டம், தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, சென்னை கலெக்டர் மாலதி ஹெலனிடம் நேற்று மனு அளித்தது.

அதன் விபரம்:

தமிழ்நாடு சுகாதார திட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவையில், தமிழகம் முழுதும், 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் 7,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல், மக்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 108 அவசர ஊர்தி சேவையை, தமிழக அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும். சம்பளம், பணி பாதுகாப்பு, வாழ்வாதாரம் தொடர்பான 11 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தும், உரிய தீர்வு காணப்படவில்லை.

கோரிக்கை நிறைவேறாவிட்டால், மதுரை, பழங்காநந்தம் ரவுண்டானா பகுதியில், வரும் 14ம் தேதி, பட்டினி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us