ADDED : பிப் 04, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஷ்ட புஜ பெருமாள் கோவில் பின் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது 4 வயது மகள், நேற்று காலை 8:00 மணி அளவில், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, மாடு முட்டியது. குழந்தையை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் நகரில் சுற்றித்திரியும் மாடுகளால், உயிர் பலி அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.