/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியின் முதுகுத்தண்டு வளைவு சீரமைப்பு
/
சிறுமியின் முதுகுத்தண்டு வளைவு சீரமைப்பு
ADDED : பிப் 23, 2024 11:50 PM
சென்னை,இலங்கையைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் முதுகுத்தண்டு வளைவை, '3டி' தொழில்நுட்ப உதவியுடன், எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை டாக்டர்கள் சரி செய்துள்ளனர்.
இது குறித்து, மருத்துவமனையில், முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை துறை இயக்குனர் கருணாகரன், முதுநிலை நிபுணர் விஜயராகவன் ஆகியோர் கூறியதாவது:
இலங்கையைச் சேர்ந்த 11 வயது சிறுமி, முதுகுத்தண்டு பக்க வளைவால் பாதிக்கப்பட்டு, அந்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அங்கு தீர்வு கிடைக்காத நிலையில், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். சிறுமிக்கு அறுவை சிகிச்சை வாயிலாக, முதுகுத்தண்டு வளைவு பிரச்னை சரிசெய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், சிறுமியின் முதுகுத்தண்டின் வடிவமே சிதைந்திருந்தது.
எனவே, '3டி' தொழில்நுட்ப உதவியுடன் எலும்பு மாதிரி உருவாக்கப்பட்டது. அந்த உதவியுடன், சிறுமியின் முதுகுத்தண்டு வளைவு அறுவை சிகிச்சை வாயிலாக சரி செய்யப்பட்டது. இப்பிரச்னையை சரி செய்யாமல் விட்டிருந்தால், உள் உறுப்புகளில் அழுத்தம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக அமைந்திருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

