/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நல்ல தண்ணீர் குளம் குப்பை கொட்டி நாசம்
/
நல்ல தண்ணீர் குளம் குப்பை கொட்டி நாசம்
ADDED : ஏப் 25, 2025 12:10 AM

பெருங்களத்துார், தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்துார், காமராஜர் நெடுஞ்சாலையை ஒட்டி, நல்ல தண்ணீர் குளம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்த குளத்து நீர், தற்போது கால்நடைகள் குடிப்பதற்கு மட்டுமே பயன்படுகிறது.
போதிய பராமரிப்பு இல்லாத நிலையில், குப்பை கொட்டப்படுகிறது. கரையில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
தவிர, குளத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த கம்பி வேலி அறுந்து கிடப்பதால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், தவறி குளத்தினுள் விழும் நிலை உள்ளது.
குளத்தை சுத்தம் செய்து, துார்வாரி, நடைபாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நல்ல தண்ணீர் குளம், அப்துல்கலாம் பூங்கா, பெருங்களத்துார் ஏரி ஆகிய இம்மூன்றையும், சி.எம்.டி.ஏ., நிதி, 5 கோடி ரூபாய் செலவில், ஒருங்கிணைத்து சீரமைக்கப்பட உள்ளது' என்றனர்.

