/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'குடி'மகன்களின் புகலிடமாகிறது சுற்றுச்சுவரில்லாத அரசு பள்ளி
/
'குடி'மகன்களின் புகலிடமாகிறது சுற்றுச்சுவரில்லாத அரசு பள்ளி
'குடி'மகன்களின் புகலிடமாகிறது சுற்றுச்சுவரில்லாத அரசு பள்ளி
'குடி'மகன்களின் புகலிடமாகிறது சுற்றுச்சுவரில்லாத அரசு பள்ளி
ADDED : ஆக 04, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலிபுதுநகர்:மணலி மண்டலம், 16 வது வார்டு, மணலிபுதுநகர், பகுதி - 1, அரசு உயர்நிலைப் பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இங்கு உள்ள பள்ளிக் கட்டடத்திற்கு சுற்றுச்சுவர் ஏதுமில்லை. இதன் காரணமாக, மாலையில் பள்ளி முடிந்த பின் கட்டடங்கள் மட்டும் பூட்டப்படுகின்றன. வளாகம் திறந்தவெளியாக இருப்பதால், மது அருந்தும் ஆசாமிகளுக்கு, இந்த இடம் மதுக்கூடமாக மாறி வருகிறது.
மேலும், குற்றவாளிகளின் புகலிடமாகவும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.