/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில்முன் பாய்ந்த காவலாளி குடும்ப தகராறில் விபரீதம்
/
ரயில்முன் பாய்ந்த காவலாளி குடும்ப தகராறில் விபரீதம்
ரயில்முன் பாய்ந்த காவலாளி குடும்ப தகராறில் விபரீதம்
ரயில்முன் பாய்ந்த காவலாளி குடும்ப தகராறில் விபரீதம்
ADDED : மே 02, 2025 12:20 AM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 44; தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்தார். இவரது மனைவி தேவி, 40. இவர், நடைபாதையில் கடை வைத்துள்ளார்.
நேற்று காலை வீட்டுக்கு வந்த வெங்கடேசன், தேவியிடம் தகராறில் ஈடுபட்டு கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தேவி, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது குறித்து மகள் தனலட்சுமி, தந்தையை போனில் தொடர்பு கொண்டு, 'உங்களால் தான், அம்மா காயமடைந்து மருத்துவமனையில் உள்ளார்' எனக்கூறியுள்ளார்.
இதனால் மன விரக்தியடைந்த வெங்கடேசன், கஸ்துாரி பாய் குடியிருப்பு ஏ பிளாக் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாள பகுதியில் சென்று, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.