/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரமற்ற தங்க மோதிரம் கோர்ட்டை நாடிய வக்கீல்
/
தரமற்ற தங்க மோதிரம் கோர்ட்டை நாடிய வக்கீல்
ADDED : ஜன 01, 2024 01:39 AM
யானைக்கவுனி:சென்னை, திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ், 30. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி செய்து வருகிறார்.
இவர், கடந்த டிச., 27ம் தேதி, யானைக்கவுனி வீரப்பன் தெருவிலுள்ள நகைக் கடையில், 22 காரட் தரத்திலான தங்க மோதிரத்தை, 15,880 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
அதற்கான பணத்தை சுப்புராஜ் அளித்த நிலையில்,'பில்' தராமல் இழுத்தடித்து உள்ளனர். பின், மோதிரத்தின் தரத்தில் சந்தேகம் ஏற்படவே, சுப்புராஜ் அதை பரிசோதித்த போது, 19 காரட் தரம் கொண்ட நகை என தெரிந்தது. இதுகுறித்து சுப்புராஜ், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின்படி, யானைக்கவுனி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.