/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
/
சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
ADDED : நவ 10, 2024 12:33 AM

மணலி, திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர், 43. இவர், இயற்கை எரிவாயு சிலிண்டர் ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டி வருகிறார்.
நேற்று அதிகாலை மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரையில் உள்ள இயற்கை எரிவாயு நிலையத்தில், எரிவாயு நிரப்புவதற்காக காலி சிலிண்டர்களை ஏற்றி சென்றார். மணலி விரைவு சாலை, எம்.எப்.எல்., நிறுவனம் அருகே, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தடுப்பில் ஏறி லாரி கவிழ்ந்தது.
இதில், ஜெய்சங்கர் பலத்த காயமடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த செங்குன்றம் போலீசார், காயமடைந்தவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். காலி சிலிண்டராக இருந்ததால், பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்ககது.