/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரபல துணிக்கடையில் திருடிய ஒருவர் சிக்கினார்
/
பிரபல துணிக்கடையில் திருடிய ஒருவர் சிக்கினார்
ADDED : ஏப் 27, 2025 02:06 AM
மாம்பலம்:தி.நகர், நாகேஸ்வர ராவ் சாலையில் 'குமரன் சில்க்ஸ்' என்ற பிரபல துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த அஜித், 47, என்பவர், காசாளராக பணிபுரிகிறார். கடந்த பிப்., 17ம் தேதி காலை, வழக்கம்போல ஊழியர்கள் கடையில் பணிக்கு வந்தனர்.
அப்போது, நான்காவது மாடியில் உள்ள 'பால் சீலிங்' உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அது வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், கல்லாவில் இருந்த 9 லட்சம் ரூபாய் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த மாம்பலம் போலீசார், தனிப்படை அமைத்து திருடர்கள் குறித்து விசாரித்தனர்.
இதில், திருட்டில் ஈடுபட்டது உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஷ்யாம் சுந்தர் ஷானி, 38, மற்றும் ராகுல் சிங், 35, என, தெரியவந்தது.
இதையடுத்து, உத்தர பிரதேசம் சென்ற மாம்பலம் போலீசார், ஷ்யாம் சுந்தர் ஷானி கைது செய்தனர். அவரிடம் இருந்து, 10,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ராகுல் சிங்கை தேடி வருகின்றனர்.