/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோர்ட்டில் போராடி 'பென்ஷன்' பெற்ற தியாகி உயிரிழந்தார்
/
கோர்ட்டில் போராடி 'பென்ஷன்' பெற்ற தியாகி உயிரிழந்தார்
கோர்ட்டில் போராடி 'பென்ஷன்' பெற்ற தியாகி உயிரிழந்தார்
கோர்ட்டில் போராடி 'பென்ஷன்' பெற்ற தியாகி உயிரிழந்தார்
ADDED : ஜன 05, 2025 12:16 AM

சென்னை,சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கபூர், 104. சுதந்திர போராட்ட வீரர். இவர், நேதாஜியின் இந்திய விடுதலை படையில் பங்கேற்று, 5 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.
வாழ்வாதாரமின்றி தவித்த கபூர், சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் கேட்டு, 1997ல் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர்.
இது தொடர்பாக, கபூர் உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'பென்ஷன்' வழங்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், தமிழக அரசு, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கடந்த 2020 டிசம்பரில், மாதம் 17,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணையை வெளியிட்டது. இதுகுறித்து, நம் நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டது.
இதை தொடர்ந்து, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில், அரசு சார்பில் கபூர் கவுரவிக்கப்பட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக, அரசின் ஓய்வூதியம் பெற்று வந்த கபூர், நேற்று வயது மூப்பால் வீட்டில் உயிரிழந்தார்.

