sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 டீக்கடைக்காரரை தாக்கிய 10 பேர் கும்பலால் பரபரப்பு

/

 டீக்கடைக்காரரை தாக்கிய 10 பேர் கும்பலால் பரபரப்பு

 டீக்கடைக்காரரை தாக்கிய 10 பேர் கும்பலால் பரபரப்பு

 டீக்கடைக்காரரை தாக்கிய 10 பேர் கும்பலால் பரபரப்பு


ADDED : மார் 19, 2026 10:07 PM

Google News

ADDED : மார் 19, 2026 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளசரவாக்கம்: வளசரவாக்கம், பிரகாசம் சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் கார்த்திக், 35. இவரது கடையின் முதல் தளத்தில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'கூகை திரைப்பட இயக்கம்' என்ற நுாலகம் இயங்கி வருகிறது. கார்த்திக்கின் டக்கடைக்கு எதிரே, ஜமால் என்பவரின் ஸ்டூடியோ செயல்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் மாலை நுாலகத்தில் இருந்த சில மாணவர்கள் கீழே வந்து, டீக்கடையில் டீ குடித்தனர்.

அப்போது, ஸ்டூடியோவுக்கு வரும் பெண்களை நுாலகத்துக்கு வருவோர், டீக்கடையில் நின்று புகை பிடித்தபடி தவறான நோக்கில் பார்ப்பதாக ஜமால் குற்றஞ்சாட்டி தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து, டீக்கடை உரிமையாளர் கார்த்திக் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜமால் 10 பேருடன் வந்து, 'நீ டீக்கடை நடத்துவதால்தான் இங்கு நின்று புகை பிடிக்கின்றனர்' எனக் கூறி கார்த்திக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். காயமடைந்த கார்த்திக் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us