sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 அரசு வேலை தருவதாக மோசடி;தி.மு.க., பிரமுகர்கள் மீது வழக்கு

/

 அரசு வேலை தருவதாக மோசடி;தி.மு.க., பிரமுகர்கள் மீது வழக்கு

 அரசு வேலை தருவதாக மோசடி;தி.மு.க., பிரமுகர்கள் மீது வழக்கு

 அரசு வேலை தருவதாக மோசடி;தி.மு.க., பிரமுகர்கள் மீது வழக்கு

1


ADDED : மார் 19, 2026 10:07 PM

Google News

ADDED : மார் 19, 2026 10:07 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பட்டதாரி வாலிபரிடம் 10 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தி.மு.க., நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 29. பொறியியல் படிப்பு முடித்து, வேலை தேடி வந்தார்.

இவருக்கு, சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த தி.மு.க., சிறுபான்மை நலப்பிரிவு உறுப்பினரான நசீர் அகமத், 35, என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.

இவர், தன் சகோதரர் தி.மு.க.,வில் சிறுபான்மை பிரிவு மாநில இணைச் செயலராக உள்ள பஷீர் அகமத் வாயிலாக, அரசின் நெடுஞ்சாலை துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக 10 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.

இதை நம்பிய சுந்தரமூர்த்தியின் தந்தை ராஜேந்திரன், பல தவணைகளாக 10 லட்சம் ரூபாயை நசீர் அகமதுவிடம் கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கிய நசீர் மற்றும் பஷீர், மகனுக்கு அரசு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதற்கிடையில் ராஜேந்திரன், உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுந்தரமூர்த்தி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மதுரவாயல் போலீசாருக்கு மாற்றப்பட்டது. தி.மு.க., பிரமுகர்கள் பஷீர் அகமது, நஷீர் அகமது ஆகிய இருவர் மீதும் மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us