/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலியில் அரண்மனை போல் அமைகிறது ரூ.7.50 கோடியில் புதிய சமுதாய கூடம்
/
மணலியில் அரண்மனை போல் அமைகிறது ரூ.7.50 கோடியில் புதிய சமுதாய கூடம்
மணலியில் அரண்மனை போல் அமைகிறது ரூ.7.50 கோடியில் புதிய சமுதாய கூடம்
மணலியில் அரண்மனை போல் அமைகிறது ரூ.7.50 கோடியில் புதிய சமுதாய கூடம்
ADDED : ஜன 18, 2025 12:41 AM

மணலி, மணலியில், 7.50 கோடி ரூபாய் செலவில், அரண்மனை வடிவில், புதிய சமுதாய நலக்கூடம் அமைவதால், அப்பகுதியைச் சேர்ந்த, 1.5 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.
சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில், 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு, மாநகராட்சி மற்றும் அரசு சார்பில், திருமணம் போன்ற வைபவங்கள் நடத்த ஏதுவாக, பெரிய அளவில் சமுதாய கூடங்கள் ஏதும் கிடையாது.
தவிர, தனியார் திருமண மண்டபங்களிலும் வாடகையும், பல ஆயிரங்களில் துவங்கி, லட்சங்களில் முடிகிறது.
இதனால், ஏழை மற்றும்நடுத்தர மக்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு பெரும் தொகையை, திருமண மண்படங்களுக்கே செலவழிக்க வேண்டி உள்ளது.
எனவே, வார்டு, 21ல், அம்பேத்கர் தெருவில், வழக்கொழிந்த நிலையில் இருக்கும் சமுதாய நலக்கூடத்தை இடித்து விட்டு, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், புதிய சமுதாய நலக்கூடம் கட்டித்தரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
அதன்படி, சில வாரங்களுக்கு முன், தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக, மணலி - அம்பேத்கர் தெருவில், 7.50 கோடி ரூபாய் செலவில், இரண்டடுக்கு வசதியுடன், பிரமாண்ட சமுதாய நலக்கூடம் அமைக்க, அடிக்கல் நாட்டினார்.
சமுதாய நலக்கூடத்தின் மாதிரி புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அரண்மனை வடிவில், பிரமாண்ட தோற்றமளிக்கும் சமுதாய நலக்கூடத்தில் பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளன.
கட்டுமான பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும் நிலையில், மணலியைச் சேர்ந்த மக்கள் இதனால் பயன்பெறுவர்.