/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உணவு குழாய் வெடித்த நோயாளிக்கு ரேலா மருத்துவமனையில் சிகிச்சை
/
உணவு குழாய் வெடித்த நோயாளிக்கு ரேலா மருத்துவமனையில் சிகிச்சை
உணவு குழாய் வெடித்த நோயாளிக்கு ரேலா மருத்துவமனையில் சிகிச்சை
உணவு குழாய் வெடித்த நோயாளிக்கு ரேலா மருத்துவமனையில் சிகிச்சை
ADDED : ஜன 15, 2024 02:18 AM
குரோம்பேட்டை:பல்லாவரத்தைச் சேர்ந்தவர் மீரான் மொய்தீன், 49. சில நாட்களுக்கு முன், இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அதிகளவு ரத்த வாந்தியும் எடுத்தார். இதையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதால், சுய நினைவை இழந்தார். சி.டி., ஸ்கேன் எடுத்து பார்த்ததில், வயிற்றுக்கு அருகில் உள்ள உணவுக் குழாய் வெடித்து, தொடர்ச்சியான ரத்தப்போக்கு ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவர்கள் பியூயுஷ் பவானே, ரவி ஆகியோரது குழுவினர், நோயாளிக்கு ஏற்பட்டிருப்பது 'போயர்ஹாவ் சிண்ட்ரோம்' என கண்டறிந்தனர்.
ரத்தப்போக்கை நிறுத்துவதற்கும், உணவுக் குழாயின் துளைகளை மூடுவதற்கும் எண்டோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பிரத்யேக உலோக கிளிப் கொண்டு, துளையிடப்பட்ட உணவுக் குழாயை மூடினர்.
இந்த சிகிச்சை, உலகிலேயே அரிதானது என்றும், உடல் நலம் தேறிய மீரான் மொய்தீன், ஆறாவது நாளில், மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார் என்றும், மருத்துவர்கள் கூறினர்.