/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
/
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
ADDED : டிச 01, 2025 01:10 AM
தாம்பரம்: அனகாபுத்துார் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், 63. இவருக்கு, நான்கு மகள்கள் உள்ளனர். மது போதைக்கு அடிமையான சந்திரசேகர், தினமும் மது குடித்து வந்து, வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால், அவரது மகள் வரலட்சுமி, சந்திர சேகரை மேற்கு தாம்பரத்தில் உள்ள 'அடல்ட் ஹோம்' என்ற தனியார் போதை மறுவாழ்வு மையத்தில், கடந்த 28ம் தேதி சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணி அளவில் உயிரிழந்தார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்ததாக, தாம்பரம் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து, போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.