/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி பேருந்து நிலையம் ரூ.2.15 கோடியில் மேம்பாடு
/
கிண்டி பேருந்து நிலையம் ரூ.2.15 கோடியில் மேம்பாடு
கிண்டி பேருந்து நிலையம் ரூ.2.15 கோடியில் மேம்பாடு
கிண்டி பேருந்து நிலையம் ரூ.2.15 கோடியில் மேம்பாடு
ADDED : டிச 01, 2025 01:10 AM
கிண்டி: கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை மேம்படுத்த, 2.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அடையாறு மண்டலம், 168வது வார்டு, கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை பேருந்து நிலையம், முக்கிய வழித்தடமாக உள்ளது. இதில், பாரிமுனை மற்றும் மயிலாப்பூர், வேளச்சேரி நோக்கி செல்லும் பேருந்துகளுக்கான இரண்டு பெரிய நிழற்குடைகள் உள்ளன.
மிகவும் சேதமடைந்துள்ள இந்த நிழற்குடைகளை அகற்றி, இழுவிசை கூரையுடன் கூடிய நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், அருகில் கட்டமைப்பு அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக, 2.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. பருவமழை முடிந்த பின், இதற்கான பணி துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.