/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லோடு வேன் ஏறி அமைந்தகரை நபர் உயிரிழப்பு
/
லோடு வேன் ஏறி அமைந்தகரை நபர் உயிரிழப்பு
ADDED : நவ 04, 2025 12:20 AM
அண்ணா நகர்: தனியார் கிடங்கு அருகே சாலையில் படுத்திருந்தவர் மீது லோடு வேன் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.
அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலை, கலெக்டர் காலனியில் தனியார் நிறுவனத்தின் கிடங்கு செயல்படுகிறது. நேற்று காலை வழக்கம் போல் கிடங்கில் இருந்து சரக்குகளை வேனில் ஏற்றிய பின், ஓட்டுநர் வேனை எடுத்துள்ளார்.
அப்போது, முன்பக்கமாக சாலையோரத்தில் படுத்திருந்தவர் மீது, சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் அறிந்து வந்த அமைந்தகரை போலீார், உடலை மீட்டு விசாரித்தனர்.
இதில், கலெக்டர் காலனி பகுதியைச் சேர்ந்த கோபி, 59, என்பதும், மது போதையில் சாலையில் படுத்திருந்ததும் தெரிந்தது. இதுகுறித்து, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

