/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.4.31 கோடியில் துார்வாரப்பட்ட தாங்கல் ஏரி நிலத்தடி நீரின் உப்புத்தன்மை குறைய வாய்ப்பு
/
ரூ.4.31 கோடியில் துார்வாரப்பட்ட தாங்கல் ஏரி நிலத்தடி நீரின் உப்புத்தன்மை குறைய வாய்ப்பு
ரூ.4.31 கோடியில் துார்வாரப்பட்ட தாங்கல் ஏரி நிலத்தடி நீரின் உப்புத்தன்மை குறைய வாய்ப்பு
ரூ.4.31 கோடியில் துார்வாரப்பட்ட தாங்கல் ஏரி நிலத்தடி நீரின் உப்புத்தன்மை குறைய வாய்ப்பு
ADDED : நவ 04, 2025 12:20 AM

சோழிங்கநல்லுார்: ஓ.எம்.ஆரில் உள்ள தாங்கல் ஏரியை மேம்படுத்த, 4.31 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. இந்த ஏரியை துார் வாரி ஆழப்படுத்தியதால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரின் உப்புத்தன்மை குறையும் என, அதிகாரிகள் கூறினர்.
சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டில், ஓ.எம்.ஆரை ஒட்டி நீர்வளத்துறைக்கு சொந்தமான தாங்கல் ஏரி உள்ளது. இதில், 24 ஏக்கர் பரப்பளவு கரையை, மாநகராட்சி சார்பில், 50 லட்சம் ரூபாய் செலவில், கடந்த ஆண்டு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கோவையை சேர்ந்த 'சிறுதுளி' என்ற அமைப்பு, 2.50 கோடி ரூபாய் சி.எஸ்.ஆர்., நிதியில் ஏரியை மேம்படுத்தியது. இந்த ஏரி, 5 அடி ஆழத்தில், 10 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கும் கொள்ளளவில் இருந்தது.
ஏரியின் மேல்பரப்பில் களிமண்ணும், 5 அடி ஆழத்தில் ஓடை மண்ணும் இருந்தன. இந்த பணியால், 10 அடி ஆழத்திற்கு துார் வாரி, 2 லட்சம் கன அடி மண் அகற்றப்பட்டது.
இதன்வாயிலாக, 30 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கும் அளவுக்கு ஆழப்படுத்தப்பட்டது. ஏரியின் மைய பகுதியில், பறவைகள் தங்கும் வகையில், இரண்டு திட்டு அமைத்து மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
இந்நிலையில், ஏரி கரையில் 1.5 கி.மீ., சுற்றளவு, 10 அடி அகலத்தில் நடைபாதை அமைத்து, தெரு விளக்கு, இருக்கை, பூச்செடிகள் உள்ளிட்ட வசதிகள் செய்ய, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, 4.31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பருவமழை முடிந்த பின், இதற்கான பணிகள் துவங்கும். ஏரியை ஆழப்படுத்தியதால், அதில் அதிக அளவில் தண்ணீரை சேமிக்க முடியும்.
அதனால், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரில் உள்ள உப்புத்தன்மை குறையும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

