/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெரிசலை பயன்படுத்தி நகை திருட்டு: 'பிக் பாக்கெட்' பெண் டில்லியில் கைது
/
நெரிசலை பயன்படுத்தி நகை திருட்டு: 'பிக் பாக்கெட்' பெண் டில்லியில் கைது
நெரிசலை பயன்படுத்தி நகை திருட்டு: 'பிக் பாக்கெட்' பெண் டில்லியில் கைது
நெரிசலை பயன்படுத்தி நகை திருட்டு: 'பிக் பாக்கெட்' பெண் டில்லியில் கைது
UPDATED : டிச 31, 2025 06:09 AM
ADDED : டிச 31, 2025 05:24 AM

சென்னை: நெரிசலை பயன்படுத்தி, நகை, பணம் திருடும் கில்லாடி 'பிக் பாக்கெட்' பெண்ணை, டில்லியில் போலீசார் கைது செய்தனர்.
ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார், 44. இவர், உறவினர் திருமணத்திற்கு நகை வாங்குவதற்காக குடும்பத்துடன், 10ம் தேதி சவுகார்பேட்டை, என்.எஸ்.சி., போஸ் சாலையில் உள்ள நகைக்கடைக்கு சென்றார்.
அங்கிருந்து செயின், இரண்டு ஜோடி கம்மல், இரண்டு மோதிரம் உள்ளிட்ட 9 சவரன் நகைகளை வாங்கி, கைப்பையில் வைத்து பெருமாள் முதலி தெரு வழியாக நடந்து சென்றனர்.
சிறிது துாரம் சென்றபோது, கைப்பை கிழிந்த நிலையில் நகைகள் திருடு போனது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அசோக்குமார், யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், இரண்டு பெண்களில் ஒருவர் பிளேடால் 'ஹேண்ட்பேக்'கை கிழித்து, நகையை திருடி ஆட்டோவில் சென்றது தெரிந்தது.
போலீசார் ஆட்டோ எண்ணை வைத்து, ஓட்டுநரிடம் விசாரித்தனர். அப்போது, ஆட்டோ ஓட்டுநரின் மொபைல் போனை வாங்கி பேசியதும் தெரிந்தது.
அந்த மொபைல் போன் எண்ணை வைத்து, திருட்டில் ஈடுபட்ட பெண் டில்லியில் இருப்பது கண்டறியப்பட்டது.
அங்கு விரைந்த தனிப்படை போலீசார், அவரை கைது செய்தனர். அவர் திருடிய நகைகளை, மத்திய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, போலீசார் அவரை நேற்று சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்ததில், மத்திய பிரதேசம் மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷிதா சிசோடியா, 25 என்பதும், லட்சுமி பாய் என்பவருடன் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரிடமிருந்து, செயின், மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகள், 4,250 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின், போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவான லட்சுமிபாயை போலீசார் தேடி வருகின்றனர். இவரை உத்தர பிரதேசம், திருப்பதி, டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த போலீசாரும் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

