/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் வடியாததால் நெடுஞ்சாலையில் குட்டை
/
மழைநீர் வடியாததால் நெடுஞ்சாலையில் குட்டை
ADDED : ஆக 13, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மழைநீர் வடியாததால் நெடுஞ்சாலையில் குட்டை
குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் குன்றத்துார் அருகே சிறுகளத்துாரில், சாலையைவிட உயரமாக மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது.
இதனால், வடிகாலில் தண்ணீர் செல்லாமல், சாலையிலேயே குட்டை போல் பல நாட்களாக தேங்கி நிற்கிறது. இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். சாலையில் மழைநீர் விரைவாக வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.கண்ணப்பன்,
குன்றத்துார்.