ADDED : ஜன 30, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு,கோயம்பேடு, ஜெய் நகரை சேர்ந்தவர் லட்சுமி, 69. இவர், கோயம்பேடு ஜெய் நகர் 3வதுதெருவில் உள்ள தன் வீட்டை, புவனேசன், 55, என்பவருக்கு, கடந்த 2022 செப்டம்பரில், வாடகைக்கு விட்டார்.
நீண்ட காலமாக வாடகை தராததால், கடந்தாண்டு பிப்ரவரியில், லட்சுமி நீதி மன்றத்தை நாடினார். இதை கண்டுகொள்ளாத புவனேசன்,வீட்டை கோவிலாக மாற்றினார். பக்தர்கள் அதிகம் திரண்டதால், அந்த தெருவில் வாகன நெரிசல் அதிகரித்தது.
'வாடகை தொடர்பாக, வழக்கு உள்ளது. பூஜைகள்செய்ய அனுமதிக்கக்கூடாது' என, கோயம்பேடு போலீசில்,லட்சுமி புகார் அளித்தார். புவனேசனை விசாரித்த போலீசார், 'வீட்டில் நடக்கும் பூஜையில் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது' என, எச்சரித்து அனுப்பினர்.

