/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழந்தண்டலத்தில் காவல் நிலையம் புதிதாக அமைக்க கோரிக்கை
/
பழந்தண்டலத்தில் காவல் நிலையம் புதிதாக அமைக்க கோரிக்கை
பழந்தண்டலத்தில் காவல் நிலையம் புதிதாக அமைக்க கோரிக்கை
பழந்தண்டலத்தில் காவல் நிலையம் புதிதாக அமைக்க கோரிக்கை
ADDED : நவ 06, 2024 12:14 AM

குன்றத்துார், சென்னை மாநகர காவல் எல்லையில் இருந்து பிரித்து, தாம்பரம் காவல் ஆணையரகம் 2022ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் கீழ், குன்றத்துார் காவல் நிலையம் இயங்குகிறது.
குன்றத்துார் காவல் நிலையத்தின் எல்லை பரப்பு, பெரிய அளவில் உள்ளது. குற்றங்கள் நடந்தால், காவல் நிலையத்திற்கு நேரில் புகார் அளிக்கவும், சம்பவ இடத்திற்கு போலீசார் செல்லவும், காலதாமதம் ஆகிறது.
எளிதான நிர்வாகத்திற்காக, குன்றத்துார் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து பழந்தண்டலத்தில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என, அரசு தரப்பில் 2022ல் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை புதிய காவல் நிலையம் அமைக்கப்படவில்லை. மேலும், குன்றத்துார் காவல் நிலையம் சார்பில் பழந்தண்டலத்தில் 2013ம் ஆண்டு திறக்கப்பட்ட காவல் உதவி மையம் மூடியே கிடக்கிறது.
இந்த உதவி மையம் அருகே கூடுதல் கட்டடம் கட்டி, பழந்தண்டலத்தில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.