/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.212 கோடியில் தடுப்பு சுவர்
/
வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.212 கோடியில் தடுப்பு சுவர்
வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.212 கோடியில் தடுப்பு சுவர்
வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.212 கோடியில் தடுப்பு சுவர்
ADDED : ஜூன் 28, 2025 02:16 AM
சென்னை:வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், 211.83 கோடி ரூபாய் மதிப்பில், தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
பருவமழை காலங்களில், மாநகராட்சி பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு புதிதாக மழைநீர் வடிகால் மற்றும் இணைப்பு கால்வாய் அமைத்தல், நீர்நிலைகள் புனரமைத்தல், மழைநீர் வடிகால்களில், வண்டல் மண் வடிகட்டி தொட்டிகளில் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
மாநகராட்சி பகுதிகளில், 3,041 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைத்து பராமரிக்கப்படுகிறது. மேலும், 81 கி.மீ., நீளத்திற்கு, 44 நீர்வழி கால்வாய் பராமரிக்கப்படுகிறது.
இதில், வெள்ள பாதிப்பை தடுக்க, நீர்வழி கால்வாய்களில், 211.86 கோடி ரூபாய் மதிப்பில், 21 நீர்வழி கால்வாய்களில் தடுப்புச்சுவர் அமைத்தும், உயர்த்தி அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.
மேலும், வீடுகளில் இருந்து குப்பை போடுவதை தவிர்க்க, வலையுடன் கூடிய சங்கிலி வேலி அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.