/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காதலியை மிரட்ட பிளேடால் அறுத்து கொண்ட ரவுடி
/
காதலியை மிரட்ட பிளேடால் அறுத்து கொண்ட ரவுடி
ADDED : அக் 19, 2024 12:46 AM
ஐ.சி.எப்., நள்ளிரவு காதலி வீட்டிற்குச் சென்று, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய ரவுடி, தனக்குத் தானே பிளேடால் அறுத்துக் கொண்டார்.
பெரம்பூரை அடுத்த ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் பழைய குற்றவாளி இளமாறன், 22. இவர், ஐ.சி.எப்., காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள இளம்பெண்னை காதலித்து வந்துள்ளார்.
இளமாறன், நேற்று அதிகாலை 1:00 மணியளவில் காதலி வீட்டிற்குச் சென்று, அவரிடம் வாக்குவாதம் செய்து, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார்.
அப்போது, அவர் மறைத்து வைத்திருந்த 'பிளேடால்' தன் கை மற்றும் கழுத்தில் அறுத்துக் கொண்டார்.
ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து ஐ.சி.எப்., போலீசார் விசாரிக்கின்றனர்.

