/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூடப்படாததால் மாசடையும் பள்ளிக்கரணை குடிநீர் கிணறு
/
மூடப்படாததால் மாசடையும் பள்ளிக்கரணை குடிநீர் கிணறு
மூடப்படாததால் மாசடையும் பள்ளிக்கரணை குடிநீர் கிணறு
மூடப்படாததால் மாசடையும் பள்ளிக்கரணை குடிநீர் கிணறு
ADDED : பிப் 11, 2025 01:24 AM

பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை, கிணற்று தெருவில் அமைந்துள்ள குடிநீர் கிணற்று நீரை, வார்டு 190ல் உள்ள குடியிருப்புவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
கிணறு முறையாக மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளதால், காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், இலை, தழைகள் விழுந்து, பாசி படர்ந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.
இதை உபயோகப்படுத்தும் மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் சூழல் உள்ளது. கோடைக் காலத்தில், இக்கிணற்று நீர் தான், அப்பகுதிவாசிகளின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
எனவே, கோடை காலம் வரை காத்திராமல், கிணறை சுத்தம் செய்து, மூடி அமைத்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது, உடனடியாக சுத்தம் செய்வதாக கூறினார்.