/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழைய பைக் விற்பனை கடையின் 'பார்க்கிங்'காக மாறிய நடைபாதை
/
பழைய பைக் விற்பனை கடையின் 'பார்க்கிங்'காக மாறிய நடைபாதை
பழைய பைக் விற்பனை கடையின் 'பார்க்கிங்'காக மாறிய நடைபாதை
பழைய பைக் விற்பனை கடையின் 'பார்க்கிங்'காக மாறிய நடைபாதை
ADDED : ஆக 20, 2025 03:12 AM

ஜாபர்கான்பேட்டை, ஜாபர்கான்பேட்டையில், பழைய பைக் கடைகளில் விற்பனைக்கு உள்ள வாகனங்களை, சாலை மற்றும் நடைபாதையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கோடம்பாக்கம் மண்டலம், 139வது வார்டு ஜாபர்கான்பேட்டையில், பிள்ளையார் கோவில் தெரு உள்ளது. இது, 100 அடி சாலை மற்றும் குமரன் நகர் பகுதியை இணைக்கிறது. இச்சாலையில், 5க்கும் மேற்பட்ட பழைய பைக் விற்பனை கடைகள் உள்ளன.
இந்த கடைகளில் விற்பனைக்கு உள்ள பைக்குகளை, நடைபாதை மற்றும் சாலையோரம் வரிசையாக நிற்க வைப்பது வழக்கம். இதனால், சாலை குறுகலாகி, அப்பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது. பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.