/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஐ.,யின் கையை கடித்த சகோதரர்களுக்கு தர்ம அடி
/
எஸ்.ஐ.,யின் கையை கடித்த சகோதரர்களுக்கு தர்ம அடி
ADDED : ஏப் 20, 2025 12:11 AM

திருவான்மியூர்,திருவான்மியூர், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள, 'எலைட் டாஸ்மாக்' அருகே போக்குவரத்து நிறைந்த கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று இருவர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
தகவலறிந்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவான்மியூர் போலீஸ் எஸ்.ஐ., வேலாயுதம் மற்றும் போலீசார் வந்து, இருவரையும் மடக்கி வாகனத்தில் ஏற்றும்போது, எஸ்.ஐ., வேலாயுதத்தின் கையை, ஒருவர் ரத்தம் கொட்டும் அளவிற்கு கடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் போதை ஆசாமிகளுக்கு சரமாரி அடிகொடுத்து, போலீசாரின் வாகனத்தில் ஏற்றினர்.
காயமடைந்த எஸ்.ஐ., அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். பின், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில், காசிமேடைச் சேர்ந்த 'லிப்ட்' மெக்கானிக் தேவகுமார், 45, செங்கல்பட்டைச் சேர்ந்த 'ஏசி' மெக்கானிக் புஷ்பராஜ், 37, என்பதும், இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது. இருவர் மீது மீது வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

