/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைதாப்பேட்டையில் அமைகிறது ரூ.3 கோடியில் சமூக நலக்கூடம்
/
சைதாப்பேட்டையில் அமைகிறது ரூ.3 கோடியில் சமூக நலக்கூடம்
சைதாப்பேட்டையில் அமைகிறது ரூ.3 கோடியில் சமூக நலக்கூடம்
சைதாப்பேட்டையில் அமைகிறது ரூ.3 கோடியில் சமூக நலக்கூடம்
ADDED : நவ 08, 2024 12:32 AM

சைதாப்பேட்டை,
அடையாறு மண்டலம், 169வது வார்டு, சைதாப்பேட்டை நீதிமன்றம் எதிரே வெங்கடாபுரம் உள்ளது.
இங்கு, 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், 9,000 சதுர அடி பரப்பில் மாநகராட்சி இடம் உள்ளது.
இதில் இருந்த பழைய கட்டடத்தில் பாய்ஸ் கிளப் செயல்பட்டு வந்தது. இங்கு, சமூக நலக்கூடம் கட்ட வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, இந்த கட்டடத்தை இடித்து, தென் சென்னை தொகுதி எம்.பி., நிதி 3 கோடி ரூபாயில், சமூக நலக்கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக 1.50 கோடி ரூபாயில், 350 பேர் அமரும் வகையில், 4,650 சதுர அடி பரப்பில், தரைதளம் கட்டப்படுகிறது. ஜனவரி மாதம், 1.50 கோடி ரூபாய் ஒதுக்கி, 4,650 சதுர அடி பரப்பில் முதல்தளம் கட்டப்பட உள்ளது.
இதன் வாயிலாக, தரைதளத்தில் நிகழ்ச்சியும், முதல் தளம் சாப்பாடு பரிமாறும் இடமாகவும் பயன்படுத்தப்படும்.
தவிர சுற்றுச்சுவர் கட்டி, வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு, ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு விடும் வகையில், பணிகள் நடந்து வருவதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.