/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
12 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு 7 தெருக்களுக்கு புதிய சாலை
/
12 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு 7 தெருக்களுக்கு புதிய சாலை
12 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு 7 தெருக்களுக்கு புதிய சாலை
12 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு 7 தெருக்களுக்கு புதிய சாலை
ADDED : மார் 12, 2026 05:22 AM

வளசவராக்கம்: வளசரவாக்கம் ஆறுமுகம் நகரின் ஏழு தெருக்களுக்கு, முதல் முறையாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கவுன்சிலரின் தொடர் முயற்சியால், 12 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு ஆறுமுகம் நகரில் ஏழு தெருக்கள் உள்ளன; 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த தெருக்களின் சாலைகள், மாநகராட்சி சாலை பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தது.
இதனால், கடந்த 12 ஆண்டுகளாக அப்பகுதியில் தார் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த முடியாத நிலை நிலவியது.
கரடு முரடான பாதையில் சென்று வர, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். அதனால், சாலை அமைக்கக்கோரி பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 151வது வார்டு கவுன்சிலர் சங்கர் கணேஷ், ஆறுமுகம் நகரில் சாலை அமைப்பது குறித்து வார்டு குழு மற்றும் மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து பேசினார்.
அவரது தொடர் முயற்சியால், ஆறுமுகம் நகரின் ஏழு தெருக்களின் பெயரும், மாநகராட்சி சாலை பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இதையடுத்து, 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 405 மீட்டருக்கு தார் சாலை அமைக்கப்பட்டது.

