sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கிண்டி சிட்கோ வளாகத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

/

 கிண்டி சிட்கோ வளாகத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

 கிண்டி சிட்கோ வளாகத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

 கிண்டி சிட்கோ வளாகத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


ADDED : மார் 12, 2026 05:22 AM

Google News

ADDED : மார் 12, 2026 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிண்டி: கிண்டி சிட்கோ நிர்வாகம் ஒதுக்கீடு செய்த கடைகளில், அளவுக்கு மேல் கூடுதலாக ஆக்கிரமித்து கட்டிய கட்டமைப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

கிண்டி தொழிற்பேட்டை வளாகம், சிட்கோ நிர்வாகம் பராமரிப்பில் இருந்தது. கடந்த மாதம் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வளாகத்தை ஒப்படைத்ததால், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, சிட்கோ நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

தொழிற்பேட்டை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வசதிக்காக, 1995ல் பால் பூத், டீக்கடை, டிபன் கடை, ஹோட்டல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக, 200 சதுர அடி வரை, 26 கடைகள் ஒதுக்கப்பட்டன.

ஒதுக்கீடு பெற்றவர்கள், 1,000 முதல் 2,000 சதுர அடி வரை சாலையை ஆக்கிரமித்து கடைகள் நடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்த கட்டமைப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

அனைத்து கடைகளையும் ஒழுங்குபடுத்தி, மாநகராட்சி வசம் ஒப்படைத்து, இதர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக, சிட்கோ அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us