/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் விபத் தில் மாணவியுடன் மாணவர் பலி
/
பைக் விபத் தில் மாணவியுடன் மாணவர் பலி
ADDED : ஜன 31, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, சென்னை, எருக்கஞ்சேரி, சர்மா நகரைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் கார்த்திக், 21 என்பவரும், ஈக்காடு பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவி ஜெயலலிதா, 19 என்பவரும் பைக்கில் ஆந்திர மாநிலம் சென்று விட்டு, ஊத்துக்கோட்டை தண்டலம் வழியே பைக்கில் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
தண்டலம் அருகே, பைக்கை ஜெயலலிதா ஓட்டி வந்தார். பைக் நிலை தடுமாறி, சாலையில் நின்ற டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.