/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ்சில் இருந்து விழுந்த மாணவர் பலி
/
பஸ்சில் இருந்து விழுந்த மாணவர் பலி
ADDED : ஜன 15, 2024 01:54 AM
வண்ணாரப்பேட்டை:தண்டையார்பேட்டை பணிமனையில் இருந்து மணலி செல்லும் தடம் எண்: 44 பேருந்தை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த அரசுகுமார், 50, நேற்று ஓட்டி வந்தார்.
பவர் ஹவுஸ் நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, மாநகராட்சி பள்ளி 10ம் வகுப்பு மாணவர் விஷால், 14, பேருந்தில் ஏறினார்.அப்போது கீழே விழுந்தார். இதில், பேருந்தின் பின்பக்க டயர் இடுப்பில் ஏறி இறங்கியதில் மாணவர் படுகாயம் அடைந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அங்கு உயிரிழந்தார்.
இந்த நிலையில், தன் மகன் விஷால் கண்டக்டர் தள்ளிவிட்டதால் உயிரிழந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.