ADDED : பிப் 11, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நசரத்பேட்டை, அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 24; தனியார் ஊழியர்.செம்பரம்பாக்கத்தில் தங்கியுள்ள இவர், நேற்று மதியம் வேலைக்கு பைக்கில் சென்றார்.
நசரத்பேட்டை அருகே செல்லும்போது, பின்னால் வந்த லாரி மோதி அவரது மார்பில் ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே பலியானார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் முருகன், 45, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இறந்த ரஞ்சித்குமாருக்கு திருமணமாகி எட்டு மாதங்களே ஆகின்றன. அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.