/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விரைவு சாலைகளில் விபத்துகளை கண்காணிக்க 'மூன்றாம் கண்' அவசியம்
/
விரைவு சாலைகளில் விபத்துகளை கண்காணிக்க 'மூன்றாம் கண்' அவசியம்
விரைவு சாலைகளில் விபத்துகளை கண்காணிக்க 'மூன்றாம் கண்' அவசியம்
விரைவு சாலைகளில் விபத்துகளை கண்காணிக்க 'மூன்றாம் கண்' அவசியம்
ADDED : நவ 03, 2025 01:33 AM
எண்ணுார்: விரைவு சாலைகளில், விபத்துகளை கண்காணிக்கும் வகையில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வடசென்னையில், எண்ணுார் விரைவு சாலை, மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் விரைவு சாலை உள்ளிட்ட பல்வேறு விரைவு சாலைகள் பயன்பாட்டில் உள்ளன.
ஸ்கூட்டர், பைக், ஆட்டோ, கார், மாநகர பேருந்து மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள் இயங்கி வருவதால், கன்டெய்னர், டிரைலர் உள்ளிட்ட பல்வேறு கனரக வாகனங்களும் இந்த சாலைகளை பயன் படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கனரக வாகன போக்குவரத்து காரணமாக, சாலை மையத்தடுப்புகள் , தெருவிளக்கு கம்பங்கள் சேதமாகின்றன. அதுபோன்ற நேரங்களில், சேதம் ஏற்படுத்தும் கனரக வாகனங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.
மேலும், விபத்துகளில் யார் மீது குற்றம் என்பதை கண்காணிக்க, விரைவு சாலைகளில், காவல்துறையின் 'மூன்றாம் கண்' என்றழைக்கும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன், எண்ணுார் விரைவு சாலையில், முன்னாள் சென்னை கமிஷனர் விஸ்வநாதன் முயற்சியில், நுாற்றுக்கணக்கான கேமராக்கள் பொருத்தப்பட்டு, பல்வேறு விபத்துகளில் துப்பு துலங்கியது குறிப்பிடத்தக்கது.

