/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் தேக்கம்... வராங்க... அகற்றுறாங்க... ரிப்பீட்டு நிரந்தர தீர்வு கிடைக்காமல் 6 மாதங்களாக மக்கள் அவதி
/
கழிவுநீர் தேக்கம்... வராங்க... அகற்றுறாங்க... ரிப்பீட்டு நிரந்தர தீர்வு கிடைக்காமல் 6 மாதங்களாக மக்கள் அவதி
கழிவுநீர் தேக்கம்... வராங்க... அகற்றுறாங்க... ரிப்பீட்டு நிரந்தர தீர்வு கிடைக்காமல் 6 மாதங்களாக மக்கள் அவதி
கழிவுநீர் தேக்கம்... வராங்க... அகற்றுறாங்க... ரிப்பீட்டு நிரந்தர தீர்வு கிடைக்காமல் 6 மாதங்களாக மக்கள் அவதி
UPDATED : நவ 03, 2025 01:30 PM
ADDED : நவ 03, 2025 01:34 AM

ஆவடி: திருமுல்லைவாயிலில், ஆறு மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி வந்து கழிவுநீரை வெளியேற்றி புகைப்படம் எடுக்கும் அதிகாரிகள், ஆறு மாதங்களாக நிரந்தர தீர்வு கண்டடையாததால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில், ஏழாவது வார்டு, அண்ணா மூன்றாவது தெருவில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, பாதாள சாக்கடையில் கழிவுநீர் வெளியேறி, சாலையில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால், முதியோர், குழந்தைகள், நோயாளிகள் என அனைவரும் 200 மீட்டர் துாரம், இரண்டு தெருக்கள் சுற்றி செல்லும் சூழல் உள்ளது.
இந்த பகுதி, வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை. இருப்பினும் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. ஒவ்வொரு முறை புகார் அளிக்கும்போது, மாநகராட்சி ஊழியர்கள் வந்து கழிவுநீரை அகற்றி செல்கின்றனர். ஆனால் நிரந்தர தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் சென்ற சில நிமிடங்களில் மீண்டும், கழிவுநீர் குளம் போல் தேங்கி விடுகிறது.
கழிவுநீரில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி, பகுதி மக்கள் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கொசு தொல்லையால், ஜன்னல்கள் திறந்து வைக்க முடியவில்லை. குழந்தைகள் வெளியில் விளையாட முடியாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். கழிவுநீர் தேங்கி இருப்பதால், அங்குள்ள பொது குழாயில் வரும் தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. தெரு பள்ளமாக இருப்பதால், வாணி விநாயகர் கோவில் சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இப்பகுதியில் பாதாள சாக்கடை மூடி வழியாக வெளியேறுவதாக கூறப்படுகிறது.
எனவே மாநகராட்சி அதிகாரிகள், தெருவில் முறைகேடாக பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்து, கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கவுன்சிலரிடம் கேட்க முயன்றபோது, கவுன்சிலர் ஜெயப்ரியா அழைப்பு எடுக்கவில்லை.
துாங்கும் சுகாதாரத் துறை
ஆவடி மாநகராட்சியில் உள்ள சுகாதாரத் துறை, வீடுவீடாக சென்று கழிவுநீர் தேங்கி உள்ளதா என ஒப்பந்த ஊழியர்கள் மூலம் ஆய்வு செய்கிறது. புகைப்படம் எடுத்து செல்கிறது. குறைந்த பட்சம், கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசு புழுக்களை அழிக்கவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது கூட செய்யாமல் துாக்கத்தில் உள்ளனர். - அன்பரசு, சமூக ஆர்வலர், திருமுல்லைவாயில்.

