/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொக்லைன் ஏற்றி சென்ற லாரி சுரங்கபாலத்தில் சிக்கி நெரிசல்
/
பொக்லைன் ஏற்றி சென்ற லாரி சுரங்கபாலத்தில் சிக்கி நெரிசல்
பொக்லைன் ஏற்றி சென்ற லாரி சுரங்கபாலத்தில் சிக்கி நெரிசல்
பொக்லைன் ஏற்றி சென்ற லாரி சுரங்கபாலத்தில் சிக்கி நெரிசல்
ADDED : டிச 13, 2025 05:26 AM

சென்னை: பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி சென்ற லாரி, தி.நகர் அரங்கநாதன் ரயில்வே சுரங்கபாலத்தில் சிக்கியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தி.நகரில் இருந்து சைதாப்பேட்டையை நோக்கி, நேற்று காலை 6:30 மணியளவில், பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக் கொண்டு, ராட்சத லாரி சென்றது.
சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கபாலம் வழியாக சென்ற போது, லாரியின் மேல் இருந்த பொக்லைன் இயந்திரம் உயரமாக இருந்ததால், பாலத்தின் நடுவே சிக்கியது.
இதனால், அவ்வழியாக மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவம் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார், பொக்லைன் இயந்திர பாகங்களை அகற்றினர். சில மணிநேர போரட்டத்திற்கு பின், லாரியை பின்னோக்கியே எடுத்து மீட்டனர்.