/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4வது நாளாக லாரிகள் 'ஸ்டிரைக்' : துறைமுக வர்த்தகம் பாதிப்பு
/
4வது நாளாக லாரிகள் 'ஸ்டிரைக்' : துறைமுக வர்த்தகம் பாதிப்பு
4வது நாளாக லாரிகள் 'ஸ்டிரைக்' : துறைமுக வர்த்தகம் பாதிப்பு
4வது நாளாக லாரிகள் 'ஸ்டிரைக்' : துறைமுக வர்த்தகம் பாதிப்பு
UPDATED : டிச 13, 2025 08:03 AM
ADDED : டிச 13, 2025 05:25 AM

காசிமேடு: லாரி உரிமையாளர் சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம், நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
சரக்கு வாகனங்களுக்கான, வாகன தரச் சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம், 850 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 28,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், வரைமுறை இல்லாமல் போடப்படும் 'ஆன்லைன்' வழக்குகளை கட்டுப்படுத்த வேண்டும்.
எல்லை சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 10ம் தேதி நள்ளிரவு முதல், கன்டெய்னர் லாரிகள், டாரஸ் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் உரிமையாளர் சங்கங்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து துறைமுக டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர், நேற்று இரவு காசிமேடு ஜீரோ கேட் முன் போராட்டத்தில் ஈடுபட்டு, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த வேலை நிறுத்தத்தால், நாள் ஒன்றுக்கு, அரசுக்கு 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
குளிரூட்டப்பட்ட கன்டெய்னர் லாரிகள் மூலம் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டு, கப்பல்களில் வெளியூர்களுக்கு செல்லும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், தேங்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை துறைமுகத்தில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

