ADDED : மார் 20, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம்,
பல்லாவரம் அடுத்த திரிசூலம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். சென்னை விமான நிலையத்தில் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இவரது இரண்டரை வயது மகன் நவீன்குமார். இரண்டு நாட்களாக, சிறுவனுக்கு சளி, காய்ச்சல் இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை சிறுவன் துாக்கத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை. பெற்றோர் உடனே, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரியவந்தது. பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

