/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழலில் லாரி மோதி விபத்து சுமை துாக்கும் தொழிலாளி பலி
/
புழலில் லாரி மோதி விபத்து சுமை துாக்கும் தொழிலாளி பலி
புழலில் லாரி மோதி விபத்து சுமை துாக்கும் தொழிலாளி பலி
புழலில் லாரி மோதி விபத்து சுமை துாக்கும் தொழிலாளி பலி
ADDED : ஏப் 11, 2025 11:40 PM
புழல், திருத்தணியைச் சேர்ந்தவர் மணி, 54; லாரி ஓட்டுனர். இவரது லாரியில், சுமை துாக்கும் தொழிலாளியாக திருத்தணி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ரங்கன், 60, என்பவர் பணியில் இருந்தார்.
இருவரும், பாரிமுனையில் இருந்து மளிகைப் பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு, நேற்று காலை புழல் வழியாக திருத்தணிக்கு சென்றனர். அப்போது திடீரென மழை பெய்ததால், மணியும், ரங்கனும் லாரியை புழல் சைக்கிள் ஷாப் பேருந்து நிறுத்தம் அருகே, ஜி.என்.டி., சாலை ஓரம் நிறுத்தி, மளிகை பொருட்கள் நனையாமல் இருக்க தார்ப்பாய் போட்டு மூடிக் கொண்டிருந்தனர்.
ரங்கன், லாரியின் பின் பக்கத்தில் நின்று, தார்ப்பாய் இழுத்து லாரியில் கட்டிக்கொண்டிருந்தார். அப்போது, மாதவரத்தில் இருந்து புழல் நோக்கி வந்த மற்றொரு லாரி, நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பின்னால் நின்ற ரங்கன், உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

