/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏரியில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
/
ஏரியில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ADDED : ஏப் 28, 2025 04:11 AM

மணலிபுதுநகர்:மணலிபுதுநகர் அடுத்த விச்சூர் - செம்பியம் மணலி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் யுவராஜ், 18; கூலித்தொழிலாளி.
இவர், நேற்று மதியம் நண்பர்கள், எபினேஷ், பிரியான் ஆகியோருடன் சேர்ந்து, செம்பியம் மணலி ஏரியில் குளிக்க சென்றார்.
அப்போது யுவராஜ், ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு நீந்தி செல்லும்போது, திடீரென நீந்த முடியாமல் மூழ்கியுள்ளார். இது குறித்து நண்பர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஊர் மக்கள் மூழ்கிய வாலிபரை மீட்டனர். இருப்பினும், யுவராஜ் மூச்சுத்திணறி உயிரிழந்தார். மணலிபுதுநகர் போலீசார் உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.