/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையில் நண்பர்களுக்குள் தகராறு கல்லால் அடித்து வாலிபர் கொலை
/
போதையில் நண்பர்களுக்குள் தகராறு கல்லால் அடித்து வாலிபர் கொலை
போதையில் நண்பர்களுக்குள் தகராறு கல்லால் அடித்து வாலிபர் கொலை
போதையில் நண்பர்களுக்குள் தகராறு கல்லால் அடித்து வாலிபர் கொலை
UPDATED : ஜன 09, 2025 02:57 AM
ADDED : ஜன 09, 2025 02:43 AM

மணலிபுதுநகர்:நாப்பாளையம் - டிரைவே கம்பெனி அருகே, நேற்று காலை, வாலிபர் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர்.
அவர்கள், மணலிபுதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்தனர்.
விசாரணைக்கு பின் போலீசார் கூறியதாவது:
மணலிபுதுநகர் - வெள்ளிவாயலைச் சேர்ந்தவர் சதா. வெள்ளிவாயல்சாவடி ஊராட்சி முன்னாள் தலைவர். இவரது மகன் விக்கி என்ற ராயப்பன், 29, மீது, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்த ராயப்பனுக்கு, திருமணமாகி சங்கீதா, 27, என்ற மனைவியும், மூன்று வயதில் மகனும், ஒன்பது மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, நாப்பாளையம் - டிரைவே கம்பெனி அருகே, கால்வாயோரம் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள், ராயப்பனை கல் மற்றும் கட்டையால் தாக்கி விட்டு தப்பியோடினர்.
தலையில் பலத்த காயமடைந்த ராயப்பன், உயிருக்கு போராடிய நிலையில், மீட்க யாரும் இல்லாமல், அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, கொலையில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மணலிபுதுநகர் வாலிபர் கொலை மூன்று பேர் கைது
இந்த
கொலை வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற கோணை, 25, அகிலன்,
25, ரவீந்திர குமார், 48, ஆகிய மூவரை, மணலிபுதுநகர் போலீசார் கைது
செய்தனர்.
விசாரணையில், அகிலனின் சகோதரி குறித்து, கொலையான விக்கி
அவதுாறாக பேசியதால் ஆத்திரமடைந்தவர், தன் நண்பர்களுடன் சேர்ந்து,
அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.