ADDED : ஜூலை 20, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:புழல் பகுதியைச் சேர்ந்தவர் அஜய், 28; தனியார் நிறுவன ஊழியர். வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த இவரது பைக், கடந்த 11ம் தேதி திருடு போனது. இது குறித்து, புழல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசாரின் விசா ரணையில் கொடுங்கையூரைச் சேர்ந்த ஷியாம், 22, என்ற வாலிபர் பைக் திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, பைக்கை மீட்டனர்.
மேலும், ஷியாம் மீது மாதவரம் பால் பண்ணை, செங்குன்றம் உள்ளிட்ட காவல் நிலையங்களில், திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரிந்தது. ஷியாமை போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர்.

