/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஏ' மண்டல டேபிள் டென்னிஸ் எம்.ஓ.பி.வைஷ்ணவா சாம்பியன்
/
'ஏ' மண்டல டேபிள் டென்னிஸ் எம்.ஓ.பி.வைஷ்ணவா சாம்பியன்
'ஏ' மண்டல டேபிள் டென்னிஸ் எம்.ஓ.பி.வைஷ்ணவா சாம்பியன்
'ஏ' மண்டல டேபிள் டென்னிஸ் எம்.ஓ.பி.வைஷ்ணவா சாம்பியன்
ADDED : செப் 26, 2025 02:33 AM

சென்னை,சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளை இரு மண்டலங்களாக பிரித்து, இரு பாலருக்கும் தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.
இதில், மகளிர் கல்லுாரி களுக்கான, 'ஏ' மண்டல டேபிள் டென்னிஸ் போட்டி, அடையாறு, பாட்ரீசியன் கலை கல்லுாரியில், நேற்று முன்தினம் நடந்தது.
ராணிமேரி, பிரசிடென்சி, ஜெபாஸ், செல்லம்மாள், எம்.ஓ.பி.வைஷ்ணவா உள்ளிட்ட எட்டு கல்லுாரி அணிகள் மோதின. அனைத்து சுற்றுகள் முடிவில், எம்.ஓ.பி.வைஷ்ணவா மற்றும் எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா அணிகள், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
விறுவிறுப்பான ஆட்டத்தில், 3 - 0 என்ற செட் கணக்கில், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லுாரி அணி முதலிடத்தை தட்டிச் சென்றது. எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா, ஜெபாஸ் மற்றும் ராணிமேரி கல்லுாரி அணிகள் முறையே, அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றின.