/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா பல்கலை கிரிக்கெட் ராஜலட்சுமி கல்லுாரி முதலிடம்
/
அண்ணா பல்கலை கிரிக்கெட் ராஜலட்சுமி கல்லுாரி முதலிடம்
அண்ணா பல்கலை கிரிக்கெட் ராஜலட்சுமி கல்லுாரி முதலிடம்
அண்ணா பல்கலை கிரிக்கெட் ராஜலட்சுமி கல்லுாரி முதலிடம்
ADDED : செப் 26, 2025 02:33 AM

சென்னை, அண்ணா பல்கலையின் மண்டல கிரிக்கெட் இறுதிப் போட்டியில், மூன்று விக்கெட் வித்தியாசத்தில், வெங்கடேஷ்வரா கல்லுாரி அணியை தோற்கடித்து, ராஜலட்சுமி கல்லுாரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
அண்ணா பல்கலையின் இரண்டாவது மண்டல கிரிக்கெட் போட்டி, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த தண்டலத்தில் உள்ள சவிதா பொறியியல் கல்லுாரியில், கடந்த 22ல் துவங்கி, நேற்று முன்தினம் மாலை நிறை வடைந்தது. போட்டியில், இரண்டாவது மண்டலத் திற்கு உட்பட்ட, 27 பொறியியல் கல்லுாரி அணிகள் பங்கேற்று, நாக் அவுட் முறையில் மோதின.
முதல் அரையிறுதியில், ஸ்ரீவெங்கடேஷ்வரா கல்லுாரி முதலில் பேட்டிங் செய்து, 18.3 ஓவர்களில், 'ஆல் அவுட்' ஆகி 78 ரன்கள் அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த, கிண்டி பொறியியல் கல்லுாரி அணி, 19.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 68 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது.
மற்றொரு அரையிறுதியில், சவிதா கல்லுாரி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 95 ரன்களை அடித்தது. அடுத்து விளையாடிய ராஜலட்சுமி பொறியி யல் கல்லுாரி அணி, 13.2 ஓவர்களில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 96 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில், முதலில் விளையாடிய ராஜலட்சுமி கல்லுாரி அணி, 20 ஓவர்களில், ஏழு விக்கெட்டுகளை இழந்து, 152 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, ஸ்ரீவெங்கடேஷ்வரா கல்லுாரி அணி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஏழு விக்கெட் இழப்புக்கு, 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால், 13 ரன்கள் வித்தியாசத்தில், ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரி அணி வெற்றி பெற்றது.