/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேலி அமைக்க கொடுத்த காசு என்னாச்சு? ஆக்கிரமிப்பு விவகாரத்தில் கலெக்டர் 'கறார்'
/
வேலி அமைக்க கொடுத்த காசு என்னாச்சு? ஆக்கிரமிப்பு விவகாரத்தில் கலெக்டர் 'கறார்'
வேலி அமைக்க கொடுத்த காசு என்னாச்சு? ஆக்கிரமிப்பு விவகாரத்தில் கலெக்டர் 'கறார்'
வேலி அமைக்க கொடுத்த காசு என்னாச்சு? ஆக்கிரமிப்பு விவகாரத்தில் கலெக்டர் 'கறார்'
ADDED : செப் 26, 2025 02:32 AM
சென்னை, ''வேளச்சேரி ரயில்வே சாலையை ஒட்டி, ஆக்கிரமிப்பு மீட்ட இடத்தில், கம்பி வேலி அமைக்க கொடுத்து காசு என்னாச்சு,'' என, சென்னை கலெக்டர் லஷ்மி சித்தார்த் ஜகடே, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
வேளச்சேரி ரயில்வே சாலையை ஒட்டி, 10 ஏக்கருக்கு மேலான இடம், சர்வே எண் குளறுபடியால், ஆக்கிரமிப்பில் சிக்கியது. இதுகுறித்து, நம் நாளிதழ் செய்தி மற்றும் நீதிமன்ற தலையீடு காரணமாக, அரசுக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டது.
வேலி அமைக்காததால், அந்த இடத்தை சிலர் மீண்டும் ஆக்கிரமித்து, கட்டடம் கட்டினர். இதுகுறித்து, நம் நாளிதழில் 19ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை மீட்டனர்.
இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், கலெக்டர் லஷ்மி சித்தார்த் ஜகடே ஆகியோர், ஆக்கிரமிப்பை மீட்பது தொடர்பாக, இரு நாட்க ளுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கிண்டி கோட்டாட்சியர், வேளச்சேரி, சோழிங்கநல்லுார் மற்றும் ரயில்வே தாசில்தார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கலெக்டர் மற்றும் கமிஷனர், அதிகாரி களிடம் கூறியதாவது:
ஆக்கிரமிப்பு இடத்தை மீட்பதில், மூன்று துறைகளுக்கும் பொறுப்பு உள்ளது. அவமதிப்பு வழக்கில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தான் நீதிமன்றம் முன் நிற்க வேண்டி உள்ளது. இனிமேல், நாளிதழ் செய்தியாகவோ, நீதி மன்றம் உத்தரவிட்டோ ஆக்கிரமிப்பை அகற்றும் நிலை ஏற்படக்கூடாது.
ரயில்வே மற்றும் விமான நிலைய தொலைத்தொடர்பு க்காக, வி.ஓ.ஆர்., என்ற 'வாய்ஸ் ஆப் ரேடியோ ஸ்டேஷன்' அமைக்க, தமிழக அரசு இடம் ஒதுக்கியது. அதிலும், ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரிய வருகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த இடங்களை மீட்டு, கம்பி வேலி அமைத்து, எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் இப்போது பிரச்னை இருக்காது. அரசு இடத்தில் வேலி அமைக்க ஒதுக்கும் நிதியை, தாசில்தார்கள் என்ன செய்கிறீர்கள்?
நீதிமன்ற வழக்கு, அதிகா ரி களின் நேர விரயம், செலவு போன்றவை தொடர்ச்சியாக ஏற்படுகிறது. இதற்கு, கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் தான் காரணம்.
யார் யாரெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்படுகிறீர்கள் என, உளவுத்துறை வாயிலாக தெரிந்து கொண்டோம். ஒவ்வொரு கனமழைக்கும், வேளச்சேரி வெள்ளச்சேரியாக மாறுவதற்கு ஆக்கிரமிப்புதான் முக்கிய காரணம்.
வேளச்சேரி, சோழிங்கநல்லுார் மற்றும் ரயில்வே தாசில்தார்கள் இணைந்து, மாநகராட்சி, காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்பாளர்களுக்கு இறுதி 'நோட்டீஸ்' வழங்க வேண்டும்.
பருவமழை துவங்கும் முன், நீர்வழிபாதை, அதை ஒட்டி உள்ள அரசு இடங்களை மீட்டு, வேலி அமைத்து, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இந்த பணியை, கோட்டாட்சியர் கண்காணிக்க வேண்டும். உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.