/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேலம்மாள் வித்யாலயா பள்ளி அணி தேசிய வாலிபாலில் 'சாம்பியன்'
/
வேலம்மாள் வித்யாலயா பள்ளி அணி தேசிய வாலிபாலில் 'சாம்பியன்'
வேலம்மாள் வித்யாலயா பள்ளி அணி தேசிய வாலிபாலில் 'சாம்பியன்'
வேலம்மாள் வித்யாலயா பள்ளி அணி தேசிய வாலிபாலில் 'சாம்பியன்'
ADDED : செப் 26, 2025 02:32 AM

சென்னை கிரண் சவுஜியா பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி நிறுவனம் இணைந்து, தேசிய அளவில் இயங்கி வரும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே ஆண்களுக்கான தேசிய வாலிபால் போட்டி, உ.பி., மாநிலத் தின் மெயின்பூரில் நடந்தது.
இதில் நாட்டின் 20க்கும் அதிகமான மாநில அணிகள் பங்கேற்றன. தமிழகம் சார்பில், சென்னையின் வேலம்மாள் வித்யாலயா ஆலப்பாக்கம் பள்ளி அணி போட்டியிட்டது.
இதன் இறுதி போட்டி, நேற்று நடந்தது. சென்னையின் வேலம்மாள் வித்யாலயா ஆலப்பாக்கம் பள்ளி அணி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் செயின்ட் ஸ்டீபன் பள்ளி அணியை எதிர்த்து மோதியது.
இதில் 25 - 15, 25 - 22, 25 - 21 என்ற நேர் செட் புள்ளியில் செயின்ட் ஸ்டீபன் பள்ளி அணியை வீழ்த்தி, 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
மேலும், அடுத்த மாதம் நடைபெற உள்ள எஸ்.ஜி.எப்.ஐ., தேசிய வாலிபால் போட்டியில் சி.பி.எஸ்.இ., அணி சார்பில் பங்கேற்கும் அணியாக, வேலம்மாள் வித்யாலயா ஆலப்பாக்கம் பள்ளி அணி தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.