/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவின் பாலகங்களில் 'மிஷின்' பழுதால் 'பில்' தர மறுப்பு
/
ஆவின் பாலகங்களில் 'மிஷின்' பழுதால் 'பில்' தர மறுப்பு
ஆவின் பாலகங்களில் 'மிஷின்' பழுதால் 'பில்' தர மறுப்பு
ஆவின் பாலகங்களில் 'மிஷின்' பழுதால் 'பில்' தர மறுப்பு
ADDED : ஜூன் 23, 2025 01:25 AM
சென்னை:சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் ஆவின் பாலகங்களில், ஆவின் தயாரிக்கும் பால், தயிர், மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், நெய் போன்ற பல்வேறு பொருட்கள் விற்கப்படுகின்றன.
அண்ணாநகர், அடையார், மாதவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் பாலகங்களில், நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்குபில் வழங்க ஊழியர்கள் மறுப்பதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆவின் நுகர்வோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
ஆவின் பால் தரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில், தொடர்ந்து ஆவின் பால் மற்றும் உபபொருட்களை பயன்படுத்தி வருகிறோம். சில ஆண்டுகளாக ஆவின் பாலகங்களில் வாங்கும் பொருட்களுக்கு பில் தருவதை நிறுத்தி விட்டனர்.
ஆரம்பத்தில் கேட்டபோது, 'பில் போடும் இயந்திரம் பழுதாகிவிட்டது. சரியானதும் பில் வழங்குகிறோம்' என்றனர். ஆனால், இதுவரை பில் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
விற்பனையாளரிடம் கேட்டால், 'பில் போடும் இயந்திரம் பழுதானது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டோம். அவர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், எங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது' என்கின்றனர்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, ஆவினில் முறைகேடு நடக்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு வலுத்து உள்ளது.
எனவே, ஆவின் பாலகங்களில் பில் வழங்கும் முறையை சரி செய்து, ஆவின் நுகர்வோருக்கு முறையான சேவையை வழங்க, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

