/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மொபைல் போன் பறிப்பு வழக்கு தலைமறைவு குற்றவாளி கைது
/
மொபைல் போன் பறிப்பு வழக்கு தலைமறைவு குற்றவாளி கைது
மொபைல் போன் பறிப்பு வழக்கு தலைமறைவு குற்றவாளி கைது
மொபைல் போன் பறிப்பு வழக்கு தலைமறைவு குற்றவாளி கைது
ADDED : மே 24, 2025 11:51 PM
மடிப்பாக்கம், :மூவரசம்பேட்டையைச் சேர்நதவர் யுவராஜ், 29. இவர், கடந்தாண்டு மடிப்பாக்கம் ராகவா நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கே வந்த இருவர், யுவராஜின் கையிலிருந்த மொபைல் போனை பறித்து சென்றனர். இதுகுறித்து, அவர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, தீவிர விசாராணையில் ஈடுபட்ட குற்றப்பிரிவு போலீசார், கடந்தாண்டு அக்., மாதம், மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ், 19, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இதே வழக்கில் தொடர்புடைய, தலைமறைவாக இருந்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த சதிஷ், 23, என்பவர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் சேர்ந்து, ஏற்கனவே மொபைல் போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும், யுவராஜின் மொபைல் போனை விற்று, வேறு மொபைல் போன் வாங்கியதும், விசாரணையில் தெரிந்தது. அவரிடமிருந்த மொபைல் போனை கைப்பற்றிய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.